'கடுவாய்' என்ற ஆற்றின் கரையில் இருப்பதால் 'கடுவாய்க்கரைப்புத்தூர்' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆற்றின் தற்போதைய பெயர் குடமுருட்டி.
மூலவர் 'சொர்ணபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சொர்ணாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
முசுகுந்த சக்கரவர்த்தி, உரோமச முனிவர், காசியப முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|